நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு!!
நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு!!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி கடந்த மாதம் பரோலில் வெளியே வந்த நிலையில், அவரது பரோல் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி அவரது தாயார் பத்மாவின் உடல் நிலையை காரணம் காட்டி 30 நாள் பரோலில் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி வந்தார்.
மேலும் 30 நாள் பரோல் நீட்டிக்க கோரி நனிளியின் தாயார் பத்மா தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததை தொடர்ந்து நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் 27ஆம் தேதியோடு பரோல் முடியயிருந்த நிலையில் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பரோலில் வந்துள்ள நளினி காட்பாடி அடுத்த பிரம்புரத்தில் உள்ள தனது தாயார் பத்மாவுடன் தங்கியுள்ளார்.
newstm.in