நானா ! 2 பெண்களை பலாத்காரம் செய்தேனா?: பிரபல நடிகர் விளக்கம்
நானா ! 2 பெண்களை பலாத்காரம் செய்தேனா?: பிரபல நடிகர் விளக்கம்
பிரபல ஹாலிவுட் நடிகர் மீது இரண்டு பெண்கள் பாலியல் பலாத்கார புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செக்ஸ் அன்ட் தி சிட்டி படத்தில் பிக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் க்றிஸ் நாத். அவர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு பெண்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார் கூறிய பெண்களில் ஒருவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த 2004ஆம் ஆண்டு வெஸ்ட் ஹாலிவுட்டில் இருக்கும் தன் அபார்ட்மென்ட்டிற்கு க்றிஸ் நாத் வந்தார். அங்குவைத்து என்னை அவர் பலாத்காரம் செய்தார். அந்த அபார்ட்மென்ட் நீச்சல் குளத்தில் சந்தித்தபோது வாங்கிய புத்தகத்தை திருப்பிக் கொடுக்கச் சென்ற என்னை பலாத்காரம் செய்தார்.
அப்பொழுது எனக்கு 22 வயது. பலாத்காரத்தால் நான் காயம் அடைந்தேன். உடனே மருத்துவமனைக்கு சென்ற எனக்கு தையல் போடப்பட்டது எனக் கூறினார்.
மற்றொரு பெண் கூறியதாவது, 2015ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் க்றிஸ் நாத்துடன் டேட் சென்றேன். அதன் பிறகு அவர் என்னை அபார்ட்மென்ட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார் என்றார். இரண்டு பெண்கள் அடுத்தடுத்து பாலியல் புகார் கூறியதால் அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே, பெண்கள் பாலியல் புகார் தொடர்பாக விளக்கம் அளித்து க்றிஸ் நாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் யாரையும் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அந்த இரண்டு பெண்களின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன். நோ என்றால் நோ தான். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றார்.