தற்சார்பு இந்தியாவாக உருவாகும் முயற்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உள்ளிட்டவை இணைந்து புதுமையான பொம்மைகளுக்கான போட்டி நடத்துகின்றன.

‘டாய்கத்தான்-2021’ எனும் இப் போட்டியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “சர்வதேச பொம்மை சந்தை சுமார் 100 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால் இதில் இந்தியா வெறும் 1.5 சதவீதத்தை பெற்றிருக்கிறது. 80 சதவீத பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது. இந்தப் போக்கை மாற்ற வேண்டும்” என்றார்.


இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன துறையினர் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தற்காலத்தில் நாடகமாடி கவனத்தை திசை திருப்புகிறார்; அவர், எதிர்காலத்துடன் விளையாடுகிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.

Tags: