சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் நடராஜன் !

சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் நடராஜன் !

Update: 2021-12-16 08:18 GMT

தனது சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருவதாக தமிழக வீரர் நடராஜன் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி நாடு முழுவதும் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன். தமிழகத்தில் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த இவர், தனது விடா முயற்சியின் மூலம் கிரிக்கெட் போட்டிகளில் பிரபலமான வீரராக உருவெடுத்துள்ளார். துல்லியமாக ஏக்கர் பந்துகளை வீசக்கூடியவர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் மற்றும் ஐபிஎல் கிரக்கெட் தொடரில் இறுதிக்கட்ட ஓவர்களில் ஏர்க்கர் பால் வீசி பல போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் வலை பயிற்சி பந்துவீ்ச்சாளராக நடராஜன் இடம் பெற்றார்.

அந்த தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் காரணம் விலகியதை தொடர்ந்து நடராஜன் ஆடும் வெலன் அணியில் சேர்க்கப்பட்டார். அதே தொடரில் டெஸ்ட, ஒருநாள் மற்றும் டி20 என 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இடையில் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடராஜன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானார்.

இதனால் கடந்த ஐபிஎல் தொடர் மற்றும் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. எனினும் டி20 உலககோப்பை தொடரில் நடராஜன் சேர்க்கப்படாதது குறித்து பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.  

இந்நிலையில், நடராஜன் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டி கிராமத்தில் சொந்தமாக கிரக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கி பாராட்டை பெற்றுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடராஜன், எனது கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருகிறேன். அதற்கு நடராஜன் கிரிக்கெட் மைதானம் (என்சிஜி) எனப் பெயரிடப்படவுள்ளது. கடந்த டிசம்பரில் முதன்முறையாக இந்திய அணிக்காகக் களமிறங்கினேன். இந்த டிசம்பரில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருகிறேன். கனவுகள் நிஜமாகும். கடவுளுக்கு நன்றி, என தெரிவித்துள்ளார்.


newstm.in

Tags:    

Similar News