தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளரும், ஒளிபதிவாளர் சந்தோஷ் சிவன் தந்தையுமான சிவன் காலமானார்! திரையுலகினர் இரங்கல்!

தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளரும், ஒளிபதிவாளர் சந்தோஷ் சிவன் தந்தையுமான சிவன் காலமானார்! திரையுலகினர் இரங்கல்!

Update: 2021-06-24 10:31 GMT

பிரபல ஒளிப்பதிவாளரும், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தையுமான சிவன் சற்று முன்னர் மாரடைப்பால் காலமானார்.    

தேசிய விருதுகளை வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சிவன். பல மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மூன்று  முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். இவர் ஒளிப்பதிவாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சந்தோஷ் சிவனின் தந்தை. 

இவர் சற்று முன்பு திருவனந்தபுரத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சந்தோஷ் சிவன் குடும்பத்தினர்களுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பல திரையுலக பிரபலங்கள் காலமாகி வரும் நிலையில் இன்று மேலும் ஒரு திரையுலக பிரமுகர் காலமாகி இருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Tags:    

Similar News