இயற்கை தாய் தன் மகனை அழைத்துக்கொண்டாள் - சீனு ராமிசாமி உருக்கம்!

இயற்கை தாய் தன் மகனை அழைத்துக்கொண்டாள் - சீனு ராமிசாமி உருக்கம்!

Update: 2021-04-17 13:56 GMT

 நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சீனு ராமசாமி தமது ட்விட்டர் பதிவில் பசுமை தமிழகத்தின் புதல்வரே,இதய அஞ்சலி விடைதர முடியா கண்ணீர் அஞ்சலி எனப் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகம் மட்டுமல்ல அவரது ரசிகர்களும் விவேக்கின் மறைவால் மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளனர்.


newstm.in

Tags:    

Similar News