ஓடிடி-யில் வெளியாகிறதா நயன் - விக்னேஷ் சிவன் படம் ?

ஓடிடி-யில் வெளியாகிறதா நயன் - விக்னேஷ் சிவன் படம் ?

Update: 2021-06-02 15:50 GMT

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். ஏற்கனவே அவர்களுடைய தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அதை தொடர்ந்து அவர்களுடைய தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராக்கி’. தரமணி ஹீரோ வசந்த் ரவி மற்றும் இயக்குநர் சிகரம் பாரதிராஜா இணைந்து நடித்துள்ள இந்த படம் ஒரு கேங்கஸ்டர் படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நெட்டிசன்களிடையே பாராட்டுக்களை பெற்றது. இந்த படம் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதே தளத்தில் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி, சிவகார்த்திகேயனின் வாழ், கார்த்தி நரேனின் நரகாசுரன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Full View

ராக்கி படத்தை இயக்கி வரும் அருண் மாதேஸ்வரன், ஆரண்ய காண்டம் படம் மூலம் கவனமீர்த்த தியாகராஜன் குமாராஜாவின் உதவி இயக்குநராக இருந்தவர். இவர் தற்போது செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சாணிக்காகிதம் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News