நயன்தாரா விக்னேஷ்சிவன் விஷூ கொண்டாட்டம்! தனி விமானத்தில் ஜோடியாக கிளம்பினார்!
நயன்தாரா விக்னேஷ்சிவன் விஷூ கொண்டாட்டம்! தனி விமானத்தில் ஜோடியாக கிளம்பினார்!
தமிழ் திரையுலகில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளத் திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இவரே முதல் இடத்தில் இருக்கிறார்.
இவருடைய செயல்களால் அடிக்கடி ரசிகர்களை கவனிக்க வைத்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக தனி விமானம் ஒன்றை எடுத்து அதில் பயணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். நயன்தாராவின் ஒரு படத்திற்கான சம்பளம் மட்டும் ரூ.6 கோடி. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போது தனி விமானத்தில் கோவாவுக்கும் கேரளாவுக்கும் பறந்து பறந்து வந்தார்.
அந்த வகையில் தற்போது கேரளாவில் ஏப்ரல் 14ம் தேதி மலையாள புத்தாண்டை கொண்டாட காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா தனி விமானத்தில் கொச்சி சென்றுள்ள புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது நயன்தாரா நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன.