காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா..! வைரல் வீடியோ

காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா..! வைரல் வீடியோ

Update: 2021-09-27 14:07 GMT

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது ஊர் அறிந்த விஷயம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இது தொடர்பான அதிகார்வப்பூர்வ தகவல் அண்மையில் தான் தெரியவந்தது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா, காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில்  தேவஸ்தான  அதிகாரிகள் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்.

கோவிலுக்கு வெளியே ஜோடியாக இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அங்கிருந்த ரசிகர்களும் நயன்தாராவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.


 

Tags:    

Similar News