நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படம் நேரடியாக ஒடிடி ரீலிஸ்..!

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படம் நேரடியாக ஒடிடி ரீலிஸ்..!

Update: 2021-07-22 10:10 GMT

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை குவித்து வரும் நடிகை நயன்தாரா அடுத்து அவள் பட இயக்குனர் மிலிந்த் ராய் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்தில் நடித்து உள்ளார்.

இப்படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இந்தத் திரைப்படத்தில் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News