இலவச சமையல் சிலிண்டர் வேண்டுமா? இதெல்லாம் கட்டாயம்!!

இலவச சமையல் சிலிண்டர் வேண்டுமா? இதெல்லாம் கட்டாயம்!!

Update: 2022-01-25 09:20 GMT

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா  திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவச சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசின் இலவச சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான தகுதி, எப்படி பெறுவது உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்லலாம். இத்திட்டத்தில் பெண்கள் மட்டுமே பயன்பெற முடியும்.

விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது குறைந்தது 18 ஆக இருக்க வேண்டும். இதைத் தவிர, அதே வீட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் வேறு ஏதேனும் சிலிண்டர் இணைப்பு இருந்தால், அவர்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டர் கிடைக்காது.

மிக முக்கியமாக, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு E-KYC (வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுதல்) அவசியம்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாநில அரசால் வழங்கப்படும் ரேஷன் கார்டு ஆதாரம் இருக்க வேண்டும்.
ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படும். வங்கி கணக்கு எண் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வேண்டும். 

முதலில், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.pmuy.gov.in/en/ என்பதில் செல்ல வேண்டும். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HP) ஆகியவற்றின் புகைப்படங்கள் அங்கே இருக்கும். உங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்

இதற்குப் பிறகு, உங்களுடைய அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். இத்திட்டத்துக்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். அதை நிரப்பி எரிவாயு ஏஜென்சி டீலரிடம் சமர்ப்பிக்கலாம். ஆவணம் சரிபார்க்கப்பட்ட பிறகு, எல்பிஜி எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

newstm.in

Similar News