சூடு, சொரணை இருந்தால் நீட் தேர்வை நீக்கியிருக்க வேண்டும்..! - முன்னாள் அமைச்சர்

சூடு, சொரணை இருந்தால் நீட் தேர்வை நீக்கியிருக்க வேண்டும்..! - முன்னாள் அமைச்சர்

Update: 2021-07-01 10:12 GMT

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை நீக்கியிருக்க வேண்டும். அதற்கு மாறாக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்வதாக கூறுகின்றனர்” என, முன்னாள் அமைச்சர் சண்முகம் கூறினார்.

விழுப்புரத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “சசிகலா, தன் பினாமி தினகரனுக்காக துவங்கப்பட்ட கட்சியில் அவரை வெற்றி பெறச் செய்ய வைக்க துப்பில்லை. இதில், அதிமுகவை கைப்பற்றுவாரா..? தகுதியான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது. யாருடைய தயவும் அதிமுகவிற்கு தேவையில்லை.

அதிமுக ஆட்சி யில் மின் துறையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தணிக்கை துறை கூறுவதாக திமுக அரசு கூறுகிறது. அப்படியென்றால், திமுக எம்பிக்கள் ராஜா, கனிமொழி ஆகியோர் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தணிக்கை துறை கூறியதை ஏற்று, அவர்களை கட்சியில் இருந்து ஏன் நீக்கவில்லை..?

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுகவினர் கூறினர். மானம், சூடு, சொரணை இருந்தால், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை நீக்கியிருக்க வேண்டும். அதற்கு மாறாக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்வதாக கூறுகின்றனர். மக்களை குழப்பி ஆட்சிக்கு வந்து விட்டனர்.

தமிழகத்தில் மின்சாரம் இல்லை, மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு முறையான உணவு இல்லை. தமிழகத்தில் அனைத்து அணில்களும் பிடிக்கப்பட்டு விட்டன. பராமரிப்பு பணிகள் முடிந்து விட்டதால், இனி மின் தடை இருக்காது என 'அணில்' அமைச்சர் கூறியுள்ளார். திமுகவின் 50 நாட்கள் ஆட்சி குறித்து அணில்களுக்குத்தான் தெரியும்” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News