ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருகிறது புதிய தடை!!
ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருகிறது புதிய தடை!!
ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்தி அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக இருந்தால் இனி ஒவ்வொரு முறையும் முழு கார்டு விவரங்களையும் பதிவிட வேண்டும். காரணம் என்னவென்றால், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை வணிக நிறுவனங்கள் சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இந்தத் தடை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வழக்கமாக ஷாப்பிங் செய்யும்போது, டெபிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்தினால் கார்டு விவரங்கள் ஏற்கெனவே சேமிக்கப்பட்டிருக்கும். 3 இலக்க CVV எண் மட்டும் வைத்து கட்டணத்தை செலுத்திவிடலாம்.
ஆனால் ஜனவரி 1 முதல் அப்படி பணம் செலுத்த இயலாது. ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கார்டு எண் உள்ளிட்ட விவரங்கள் அழிக்கப்பட்டுவிடும். இனி ஒவ்வொரு முறையும் கார்டு எண்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.
அனைவரும் தங்கள் டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு எண்களை மனப்பாடம் செய்துவைக்க வேண்டுமென்பதே இதன் பொருள். இந்த புதிய நடைமுறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் நோக்கில் கார்டு விவரங்களை சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
newstm.in