இந்தியாவில் 3 மாநிலங்களில் புதிய வகை கொரோனா ‘டெல்டா பிளஸ்’..!
இந்தியாவில் 3 மாநிலங்களில் புதிய வகை கொரோனா ‘டெல்டா பிளஸ்’..!
இந்தியாவில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் முதல் அலையை விட 2-வது அலையில் கடும் விளைவுகள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு பூஞ்சை நோய் பாதிப்புகளும் ஏற்பட தொடங்கின. நாடு அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளையும் சந்தித்தது.
நாட்டில் கொரோனா வைரசானது உருமாறிய வகையில் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்காவில் முதலில் அவை கண்டறியப்பட்டன. பின்பு பல நாடுகளுக்கும் அவை பரவின.
இந்நிலையில், டெல்டா வகை கொரோனா 2-வது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை பரவி வருகிறது என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வகை இந்தியாவில் இல்லை என்று நம்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், மராட்டியத்தில் 21 பேரிடம் இது பரவியுள்ளது. கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் இரண்டு பேரிடமும், பத்தனம்திட்டாவில் ஒருவரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மத்தியபிரதேச தலைநகரம் போபாலில் 65 வயதான பெண்மணிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.