குளிர்காலத்தில் புதிய உருமாறிய கொரோனா உருவாக வாய்ப்பு ..!!
குளிர்காலத்தில் புதிய உருமாறிய கொரோனா உருவாக வாய்ப்பு ..!!
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்றானது, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ள நிலையில், கொரோனா தொற்று தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டின் குளிர்காலத்தில் புதிய உருமாறிய கொரோனா தொற்று உருவாக வாய்ப்புள்ளதாக பிரெஞ்சு அரசின் அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு அரசின் அறிவியல் கவுன்சில் தலைவரான ஜீன் பிராங்காயிஸ் டெல்பிரைசி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார்.
அதில் இந்த ஆண்டின் குளிர்காலத்தில் புதிய உருமாறிய கொரோனா தொற்று உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். அந்தப் புதிய தொற்று மிக ஆபத்தானதா? என்றோ, அதன் விளைவுகள் குறித்தோ முன்கூட்டிக் கணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டோ, அதற்கடுத்த ஆண்டோ இயல்புநிலை திரும்ப வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.