மது போதையில் புது மாப்பிள்ளை குத்திக்கொலை!!

மது போதையில் புது மாப்பிள்ளை குத்திக்கொலை!!

Update: 2022-01-29 20:15 GMT

மது போதையில்  ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிளை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி அருகே சகாய மாதா தெருவைச் சேர்ந்த  கவாஸ்கர் (37) என்பவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.

அப்போது போதையில் ராஜா என்பவருடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகராறு கைகலப்பாக மாறியதில்  ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கவாஸ்கர் கழுத்தில் குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கவாஸ்கரை அப்பகுதியினர்  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார்  உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருமணமான மூன்றே மாதத்தில் இளைஞர் கொலையான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News