இந்தியாவில் புதிய உச்சம்.. முதல் முறையாக 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

இந்தியாவில் புதிய உச்சம்.. முதல் முறையாக 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

Update: 2021-05-01 11:48 GMT

இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சமாக நேற்று ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலை எதிர்பார்த்ததைவிட பெரும் வீரியமுடன் பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக தினசரி கொரோனாவால் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 3 லட்சமாக பதிவாகி வந்தது. அதே போல உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தினந்தோறும் சாதனை அளவாக 3,600க்கும் மேல் பதிவாகி வந்தது. இதனால் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறித்த அறிவிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 4,01,993 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 3523 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில் 2,99,988 பேர் சிகிச்சை முடிந்து பூரண குணநலன் பெற்று வீடு திரும்பியிருக்கின்றன.

இதனையடுத்து இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.91 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து 1,56,84,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். இந்தியாவில் மொத்தமாக கொரோனா பலி எண்ணிக்கை 2,11,853 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 32,68,710 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 15,49,89,635 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News