ரூ.12,400 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்! கோவையில் பிரதமர் தொடங்கி வைத்தார்!
ரூ.12,400 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்! கோவையில் பிரதமர் தொடங்கி வைத்தார்!
கோவையில் ரூ.12,400 கோடி மதிப்பில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசும் போது, நாட்டின் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முக்கியப் பங்காற்றி வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் அவசியம். இச்சூழலில் புதிய மின் திட்டங்களை தொடங்கி வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நெய்வேலியில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் திட்டம் ரூ.7,800 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 65 சதவீதத்துக்கும் கூடுதலான மின்சாரம் தமிழகத்துக்கே கிடைக்கும் என்றார்.
மேலும், ஸ்ரீபெரும்புதூர் அருகே பல்வகை சரக்குகளைக் கையாளும் புதிய பூங்கா விரைவில் தொடங்கப் பட உள்ளதாகவும், வ.உ.சி. துறைமுகப் பகுதியில் உள்ள சாலை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ரூ.330 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.