ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் செம ஹேப்பி !
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் செம ஹேப்பி !
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்தப் படத்தின் வேலைகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்திற்கான விளம்பர வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீதம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீடு திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை அறிவித்தனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் நிலவி வரும் கொரோனா பாதிப்புகள் குறைந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டால் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை மார்ச் மாதம் 18ஆம் தேதி வெளியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். இல்லையெனில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகும், என்று தெரிவித்துள்ளது.
#RRRMovie on March 18th 2022 or April 28th 2022. 🔥🌊 pic.twitter.com/yoGxM1WcYm
— DVV Entertainment (@DVVMovies) January 21, 2022
படக்குழுவினரின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
newstm.in