திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க புதிய கட்டுப்பாடு.. பக்தர்கள் அதிர்ச்சி !!
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க புதிய கட்டுப்பாடு.. பக்தர்கள் அதிர்ச்சி !!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவிலான பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
முன்னதாக, ஆன்லைனில் வெளியிடப்படும் ரூ.300 தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்ததற்கிடையே, பரிசோதனை அடிப்படையில் இலவச தரிசன டோக்கன்களை சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் தினமும் 2,000 பேருக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இதனையடுத்து தற்போது, அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. நாள்தோறும் இரவு 11.30 வரை 8,000 பக்தர்களுக்கு இலவச சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வருகை புரிந்த வண்ணம் இருந்தனர். நேற்றைய தினம் 28,849 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் ஆகியவை கட்டாயம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் தங்களது ஆதார் கார்டுகளை காண்பித்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க புது கட்டுப்பாட்டை தேவஸ்தானம் விதித்துள்ளது. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வருகிற 25ஆம் தேதி முதல், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in