மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களை  செயல்படுத்துதல் குறித்த இணைய தள கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, நாட்டில் விவசாய சமூகத்தின் விளைபொருட்களை விற்பனை  செய்வதற்கான வழிகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.  

இதேபோல் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ரூ16 லட்சத்து 50 ஆயிரம் கோடி வேளாண் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கிராமப்புற உள்கட்டமைப்பு நிதியானது ரூ.40ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மைக்ரோ பாசனத்திற்கான ஒதுக்கீடு இரட்டிப்பாகி  இருக்கின்றது.

21ம் நூற்றாண்டில் அறுவடைக்கு பின்னர் உணவு பதப்படுத்துதல் என்பது வேளாண் துறையில் சக்தியை மேம்படுத்துவதற்கானதாக  இருக்கும். அதற்காக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது எனவும் கூறினார்.  

வேளாண் ஆய்வு மற்றும் வளர்ச்சி பணிகளில் தனியார் ஈடுபடும் நேரம் வந்துவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் வேளாண் பொருள் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், சிறந்த விலை கிடைப்பதற்கும்  உணவு பதப்படுத்தும் துறையில் புரட்சி ஏற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதாவது உணவு பதப்படுத்துதல் புரட்சிக்காக விவசாய சமூகத்தோடு இணைந்து பொதுமக்கள்-தனியார் பங்களிப்பு மற்றும்  கூட்டுறவு அமைப்புக்கள் முழு பலத்தோடு முன்வர வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுக்காக நமது நாட்டின் விவசாய துறையை உலகளாவிய  சந்தையில் நாம் விரிவுப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

newstm.in

Tags: