பிப்ரவரி 1 முதல் வங்கி பண பரிவர்த்தனையில் புதிய விதிமுறைகள்!!

பிப்ரவரி 1 முதல் வங்கி பண பரிவர்த்தனையில் புதிய விதிமுறைகள்!!

Update: 2022-01-16 13:43 GMT

பிப்ரவரி 1 ம் தேதி முதல் எஸ்.பி.ஐ. வங்கி ஆன்லைன் பண பரிவர்த்தனை முறையில் மாற்றங்களை கொண்டு வருகின்றது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, அதன் வாடிக்கையாளர்கள் தேவைகளை பொறுத்து அவ்வப்போது  புதிது புதிதாக சலுகைகளையும், ஏடிஎம் பயன்பாடு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் பண பரிவர்த்தனை ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது.  அந்த வகையில் IMPS பரிவர்த்தனை சேவைக்காக கட்டணங்களில் மாற்றங்களை பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து கொண்டு வருகிறது. இதன் மூலம் விடுமுறை தினம் என எந்த கட்டுப்பாடுகளும் வருடத்தின் அனைத்து நாட்களுமே  எந்த விதத் தடையும் இல்லாமல் பணம் அனுப்பலாம். பணத்தை உடனடியாக அனுப்பவும், பெறவும் இந்த முறை மிக சிறந்ததாக வாடிக்கையாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 


தற்போது பிப்ரவரி 1 முதல் பணப்பரிவர்த்தனை முறைகளில் புதிய மாற்றம் செய்யப்படுவதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. அதன்படி, IMPS பரிவர்த்தனை வரம்பு  ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கி வாயிலாக மேற்கொள்ளப்படும் IMPS பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் . ஆனால் டிஜிட்டல் தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.ரூ.1000 முதல் ரூ.10,000 வரையிலான IMPS பரிவர்த்தனைக்கு ரூ.2 மற்றும் ஜிஎஸ்டி தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரையில் ரூ.4 கட்டணமும், ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் ரூ.12 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.தற்போது அமல்படுத்தப்பட உள்ள புதிய விதிகளின் படி  ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்  கிடையாது. ஆனால் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News