புதிய வகை வைரஸ்.. மூன்றில் ஒருவருக்கு இறப்பு.. வூகான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!
புதிய வகை வைரஸ்.. மூன்றில் ஒருவருக்கு இறப்பு.. வூகான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், சீனாவின் வூகான் நகரில் கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது.
இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் தொற்று பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, சுகாதாரத் துறையை அச்சுறுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தற்போது உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது.
இந்நிலையில், மிகவும் அபாயகரமான ‘நியோகோவ்’ என்ற வைரஸ் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸ் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதே நேரத்தில் வேகமாக பரவும் தன்மையும் கொண்டுள்ளது என்றும் சீனாவில் உள்ள வூகான் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், நியோகோவ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என்றும், இதனால் பாதிக்கப்படும் மூன்றில் ஒருவர் இறக்கின்றனர் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.