வாட்ஸ் அப் செயலியில் புது அப்டேட்!! உடனே செட்டிக்ஸ் மாத்திக்கோங்க!!

வாட்ஸ் அப் செயலியில் புது அப்டேட்!! உடனே செட்டிக்ஸ் மாத்திக்கோங்க!!

Update: 2020-03-09 20:51 GMT

நீங்க நல்லா இருக்கீங்களா, எங்க இருக்கீங்க என்று உறவினர்களிடமோ , நண்பர்களிடமோ கேட்ட காலம் எல்லாம் மலையேறி போய் விட்டது. உங்க வாட்ஸ் அப் நம்பர் இதுவே தானா? இல்லை வேற நம்பரா? என்று வீட்டில் நான்கு உறுப்பினர்கள் இருந்தால், குறைந்த பட்சமாக ஆறேழு செல்போன் நம்பர்களாவது வைத்திருக்கிறார்கள். ஆண்ட்ராய்டு செல்போன்கள் இல்லாதவர்களே இல்லை எனுமளவிற்கு இந்தியாவிலும் செல்போன்கள் மலிந்து விட்டன.

தற்போது வாட்ஸ் அப் செயலியில் புது அப்டேட்டாக டார்க் மோட் ஆஃப்ஷன் வந்து விட்டது. வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தும் போது, தொடர்ந்து செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதால், செல்போன் வெளிச்சம் கண் பார்வையை பாதிப்படையச் செய்கிறது. வயதானவர்களும் வாட்ஸ் அப் உபயோகிக்கும் காலத்தில், இது ஒரு பெரிய குறைபாடாக இருந்து வந்தது. தற்போது இந்த குறைபாட்டைப் போக்கும் விதமாக, வாட்ஸ் அப் செயலி,  டார்க் மோட்  எனப்படும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

இதனால் கண்ணுக்கு வலி ஏற்படுவதை தடுக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த டார்க் மோட் வசதியானது ஏற்கனவே பல செயலிகளிலும், ஐஓஎஸ் மொபைல் போன்களிலும் வந்துள்ளது. தற்போது இந்த வசதி வாட்ஸ்-ஆப் வெர்ஷன் 2.20.30ல் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த வசதியை உங்கள் செல்போன்களிலும் கொண்டு வருவதற்கு ப்ளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ்-ஆப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். பின்பு செட்டிங்க்ஸ் ஆப்ஷனுக்கு சென்றால் சாட்ஸ் என்ற ஆப்ஷன் தேர்வு செய்ய வேண்டும். அதற்குள் டார்க், லைட் என்ற இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், டார்க் மோட் செலக்ட் செய்தால், உங்களது கண் பார்வை தப்பும்!!

newstm.in

Tags:    

Similar News