சீனாவை உலுக்கியெடுக்கும் புது வைரஸ்! பயத்தில் உறைந்த மக்கள்! அவசர ஆலோசனையில் அரசு!
சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து நிறுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது. அவசர கதியில் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டு வரும் நிலையிலும், உலகின் பல பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் காரணமாக சீனாவிற்கு சுற்றுலா..
சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து நிறுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது. அவசர கதியில் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டு வரும் நிலையிலும், உலகின் பல பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் காரணமாக சீனாவிற்கு சுற்றுலா உட்பட, ஏற்றுமதி, இறக்குமதி என்று பல வகைகளிலும் பலத்த பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது சீனாவில் படு மோசமான பறவை காய்ச்சல் நோயைப் பரப்பி வரும் புதுவகையான H5N1 வகை வைரஸ் பரவி வருகிறது. H5N1 வகை வைரஸ் சீனாவில் உள்ள கோழிகளை தாக்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள சீன வேளாண் அமைச்சகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஷாயாங் நகரத்திற்கு அருகில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் இருக்கும் கோழிகளுக்கு இந்த H5N1 வகைப் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது சீன மக்களை மேலும் நிலைகுலையச் செய்துள்ளது.
சீனாவில் தற்போது பறவைக் காய்ச்சல் நோய் பரவிவருவதை சீனாவின் வேளாண் அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. அந்தப் பகுதியில் இருந்த பண்ணை ஒன்றில் மொத்தமுள்ள 7,850 கோழிகளில் 4,500 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். இதன் காரணமாக அங்குள்ள ஊழியர்கள் அந்த 4,500 கோழிகளையும் கொன்றுள்ளனர்.
மேலும் 20,000 பறவைகளை நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் அதிகாரிகள் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. H5N1 என்ற இந்த வைரஸ் பறவைகளுக்கு கடுமையான சுவாச நோயை ஏற்படுத்தும் என்றும், மனிதர்களுக்கும் தொற்றும் தன்மை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது சீனாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
newstm.in