புத்தாண்டு கொண்டாட்டம்.. குற்றாலத்தில் 3 நாட்கள் குளிக்க தடை..!
புத்தாண்டு கொண்டாட்டம்.. குற்றாலத்தில் 3 நாட்கள் குளிக்க தடை..!
ஆங்கில புத்தாண்டையொட்டி குற்றால அருவிகளில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், மூன்று நாட்களுக்கு குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
பல மாதங்களுக்குப் பிறகு கடந்த 20-ம் தேதி குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து குளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது. அதன்படி சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் நாள்தோறும் அதிக அளவில் குளித்து செல்கின்றனர்.இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாகவும், புத்தாண்டு மற்றும் விடுமுறை நாட்கள் என்பதாலும் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு வரும் 31ம் தேதி முதல் 2ம் தேதி வரையிலான மூன்று நாட்கள் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.