புத்தாண்டு பரிசு – ஜாக்பாட் அறிவிப்பு!!

புத்தாண்டு பரிசு – ஜாக்பாட் அறிவிப்பு!!

Update: 2021-12-22 07:18 GMT

புத்தாண்டு பரிசாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 5.24 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இது, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 33.536 சதவீதத்தில் இருந்து 38.776 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி வரும் ஜனவரி மாதம் முதல் மூன்று தவணைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜில்லா பரிஷத், மண்டல் பரிஷத், கிராம பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி, முனிசிபல் கார்ப்பரேஷன், விவசாய மார்க்கெட் கமிட்டி (ஏஎம்சி), ஜில்லா கிராந்தாலயா சமஸ்தா, உதவி பெறும் பாலிடெக்னிக் உள்ளிட்ட உதவி பெறும் நிறுவனங்களின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.

மேலும் வழக்கமான ஊதிய விகிதத்தில் உள்ள ஆந்திர வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் ஒய்எஸ்ஆர் தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பணிபுரிவோர் இதன் மூலம் பயன் அடைவார்கள் என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

Similar News