மதுப் பிரியர்களுக்கு புத்தாண்டு ஆஃபர்.. குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்..!

மதுப் பிரியர்களுக்கு புத்தாண்டு ஆஃபர்.. குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்..!

Update: 2021-12-31 05:00 GMT

புத்தாண்டை முன்னிட்டு, குவாட்டர் மது பாட்டில் வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என மதுபானக் கடை விளம்பரத்தால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது.


இதனால், புதுவையில் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுபான கடைகள், பார்கள், விடுதிகள் என எந்த இடத்திலும் மதுபான விற்பனை கூடாது. பொது இடங்களில் மது அருந்தக்கூடாது என சில கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி தவளக்குப்பம் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் மதுபான கடையில், புத்தாண்டை முன்னிட்டு ஒரு குவாட்டர் மது பாட்டில் வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என்றும், இந்த சலுகை இன்று முதல் 1ம் தேதி வரை இருக்கும் என அறிவித்துள்ளதால் குடிமகன்கள் இன்று காலை முதலே அந்த மதுக் கடையில் மது அருந்த அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

Similar News