புத்தாண்டில் சோகம்.. சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து.. 4 பேர் பலி..!
புத்தாண்டில் சோகம்.. சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து.. 4 பேர் பலி..!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டு அன்று நடைபெற்றுள்ள இந்த சோகம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது.
இந்த ஆலையில் சுமார் 30 பேர் பணியாற்றி வந்த நிலையில், வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாகவும், மற்றவர்களை மீட்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.