புத்தாண்டுக்கு கட்டுப்பாடு – மதுக்கடை 50% மட்டுமே!!
புத்தாண்டுக்கு கட்டுப்பாடு – மதுக்கடை 50% மட்டுமே!!
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். ஜனவரி 2ஆம் தேதி வரை இந்த தற்காலிக ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டது.
அடுத்துவரும் சில நாட்களுக்கு அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் கூடுமானவரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
கேரளாவில் உள்ள கடற்கரைகள், வணிக தளங்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும், தடுப்பு நடவடிக்கைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அந்த குறிப்பிட்ட நேரம் வரையிலும் பார்கள் கிளப்புகள் ஹோட்டல்கள் ரெஸ்டாரன்ட்கள் ஏற்கனவே உள்ள 50 சதவீத இருக்கை வசதி மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்றும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
newstm.in