நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட்: அக்ஸர் படேல் அசத்தல் பந்துவீச்சு !!
நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட்: அக்ஸர் படேல் அசத்தல் பந்துவீச்சு !!
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி முதலில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவுடன் விளையாடியது. இத்தாெடரை 3-0 என இந்திய அணி முழுமையாக வென்றது.
இதனையடுத்து, இந்தியா- நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2ஆவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 57 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது.
நியூசிலாந்து அணியில் வில் யங் 75 ரன்களுடனும், டாம் லாதம் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வில் யங் 89 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லாதம் 95 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.
கடைசியாக நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதனையடுத்து இந்திய அணி 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் கில் ஒரு ரன் எடுத்திருந்தப்போது ஆட்டமிழந்தார். ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.