துப்பாக்கி முனையில் செய்தி வாசிப்பாளர்...!!

துப்பாக்கி முனையில் செய்தி வாசிப்பாளர்...!!

Update: 2021-08-31 05:15 GMT

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டு மக்களே வேறு நாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்து வருகின்றனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. தாலிபான்கள் நாட்டில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதாக கூறினார்கள்.

சில நாட்களுக்கு முன்பு, டோலோ நியூஸுடன் பணிபுரியும் ஆப்கானிஸ்தான் நிருபர் மற்றும் ஒரு கேமராமேன் ஆகியோர் காபூலில் தாலிபான்களால் நகரத்தில்  தாக்கப்பட்டனர்.

நங்கர்ஹார் மாகாணத்தில் தலைநகர் காபூல் மற்றும் ஜலாலாபாத்தில் தாலிபான்கள் பத்திரிகையாளர்களை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காபூலைக் கைப்பற்றியதிலிருந்து கடந்த வாரங்களில் தாலிபான்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். தாலிபான்கள்ஜெர்மன் ஊடக அமைப்பான டாய்ச் வெல்லே (DW) இல் பணிபுரியும் ஒரு நிருபரின் குடும்பத்தை சேர்ந்தவரை கொலை செய்தனர்.

மேலும் சமீபத்ததில் வெளியான வீடியோ ஒன்று பத்திரிகை சுதந்திரம் குறித்து தாலிபான்கள் அளித்த வாக்குறுதி  குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது.

செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பவருக்கு பின்னால் துப்பாக்கி ஏந்திய தாலிபான்கள் காட்சி அளிக்கிறார்கள்.


 

Tags:    

Similar News