துப்பாக்கி முனையில் செய்தி வாசிப்பாளர்.. வைரலாகும் தலிபான்கள் அட்டூழியம் வீடியோ !

துப்பாக்கி முனையில் செய்தி வாசிப்பாளர்.. வைரலாகும் தலிபான்கள் அட்டூழியம் வீடியோ !

Update: 2021-08-30 18:32 GMT

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஒருவர் தாலிபான்களில் துப்பாக்கி முனையில் செய்தி வாசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தான் தற்போது ஒட்டுமொத்தமாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்கா ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குறிப்பாக வீடு வீடாக சென்று பெண்களை வலுகட்டாயமாக தூக்கி தலிபான்கள் திருமணம் செய்வதாகவும், தப்பிச்செல்ல காரில் செல்லும் மக்களை பின்தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வதாகவும், பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தும், இசைக்கு தடைவிதித்தும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போது பத்திரிகையையும் தலிபான்கள் அடக்குமுறை செய்துள்ள இந்த வீடியோவால் அம்பலமாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் மக்கள் மீதான தாலிபான்களின் அடக்கு முறையை வெளிப்படுத்தும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதன்வரிசையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

அந்த வீடியோவில், 'தாலிபான்களை பார்த்து பயப்பட வேண்டாம், அவர்கள் மோசமானவர்கள் அல்ல என ஆப்கன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் மரண பீதியில் செய்தி வாசிக்க அவர் பின்னால் துப்பாக்கிகளுடன் தாலிபான்கள் நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


newstm.in

Tags:    

Similar News