அடுத்த அதிரடி.. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்?
அடுத்த அதிரடி.. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்?
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் மீது மோசடி புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 17ஆம் தேதி அவரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல்துறை தெரிவித்துள்ளது.
விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு வெவ்வேறு கார்களில் மாறிமாறி சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெங்களூரு, சென்னை, கேரளா போன்ற பல்லேறு பகுதிகளில் அவரைத் தேடிவருகின்றனர். எனினும் அவரை பிடிக்கமுடியவில்லை. தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்புடையவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு இன்று லுக் அவுட் நோட்டீஸ் வழங்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in