இன்று முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு! அரசு அதிரடி !

இன்று முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு! அரசு அதிரடி !

Update: 2021-03-22 20:39 GMT

இந்தியாவில்  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு சில வாரங்களாக அதிகரித்து வருவதை அடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.   குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அசுர வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் மறுபடியும்  ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும்  பாதிப்பு அதிகரித்து உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், உதய்பூர், சக்வாரா, கோட்டா, குஷல் கார் நகரங்களில் இன்று முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநகராட்சிகளிலும் இரவு 10 மணி வரை மட்டுமே சந்தைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்திலும் அதுகுறித்த அறிவிப்புக்கள் வெளியிடப்படலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News