ஆந்திராவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு.. இறுகும் கட்டுப்பாடுகள் !!

ஆந்திராவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு.. இறுகும் கட்டுப்பாடுகள் !!

Update: 2021-04-24 16:20 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ஆவது அலை தொடக்கத்தில் குஜராத், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் தான் கொரோனா தீவிரமாக இருந்தன. ஆனால் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. 

அந்த வகையில், ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 ஆயிரம் பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிபபு கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பலி 7,500-ஐ தாண்டியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஆந்திரா மாநிலம் முழுவதும் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் உயர்மட்ட கோவிட் சீராய்வு கூட்டம் நேற்று நடைபெற்றஅதன்பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வருகிறது, இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக இரவுநேர ஊரடங்கு விதிப்பது என முடிவு எடுக்கப்பட்டதாக துணை முதல்வர் ஏ.கே.கே ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆந்திராவில் 18 வயது முதல் 45 வயது வரை 2.04 கோடி பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு தடுப்பூசி முகாம்களுக்காக சுமார் ரூ.900 கோடி மாநில அரசால் செலவிடப்படுகிறது. எனவே அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார். 

இரவுநேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். அத்தியாவசிய, அவசர சேவைகளான மருத்துவம், பால் விநியோகம் உள்ளிட்டவை மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

newstm.in

Tags:    

Similar News