தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று  குறித்து பொதுமக்கள் அலட்சியம் காட்டுவது கவலை தருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் கூடிம் பொதுமக்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணிவதில்லை. யாரும் சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பதில்லை. இந்நிலையில் மீண்டும் தினந்தோறும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய கட்டுப்பாடுகள் பலன் அளிக்கவில்லை என்றால் வேறு வழியில்லாமல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: