"வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும்" நிர்மலா சீதாராமன் அறிவிப்பு !
"வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும்" நிர்மலா சீதாராமன் அறிவிப்பு !
வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும் என்றும், அரசின் தானிய கொள்முதல் மூலம் ஓராண்டில் ஒன்றரை கோடி விவசாயிகள் கூடுதலாக பயனடைந்துள்ளனர் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றில் காகிதம் இல்லாத முதல் பட்ஜெட்டை பாஜகவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் நலன்களை காக்க அரசு உறுதிபூண்டுள்ளது. வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவு உயர்த்தப்பட்டு கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், நெல், கோதுமைக்கு அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்தி விற்பனை மையங்கள் மூலமாக சிறப்பு கட்டமைப்பு நிதியம் மூலம் கடன் வசதி செய்யப்படும் என்றும், வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும் என்றும். அரசின் தானிய கொள்முதல் மூலம் ஓராண்டில் ஒன்றரை கோடி விவசாயிகள் கூடுதலாக பயனடைந்துள்ளனர் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் e-Nam திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு. 1,000 மண்டிகள் இணைப்பும், வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கொவிட்-19 காலக்கட்டத்தில் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைந்த அளவில் உயிரிழப்பு இருந்தது என்றும், காற்றுமாசைக் கட்டுப்படுத்த ரூ.2,217 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதகாவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.