தங்கம் இறக்குமதி வரி 2.5 சதவீதம் குறைப்பு! 75 வயதுக்கு மேல் வருமான வரி தாக்கல் செய்யத் தேவையில்லை... பட்ஜெட்டில் அதிரடி!

தங்கம் இறக்குமதி வரி 2.5 சதவீதம் குறைப்பு! 75 வயதுக்கு மேல் வருமான வரி தாக்கல் செய்யத் தேவையில்லை... பட்ஜெட்டில் அதிரடி!

Update: 2021-02-01 13:04 GMT

வரும் நிதியாண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய வரலாற்றில் காகிதம் இல்லாத முதல் பட்ஜெட்டை பாஜகவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து புதிய சாதனை படைத்தார். உலகம் முழுவதும் எதிர்கொண்ட வரலாறு காணாத நிலைமைகள் குறித்தும், கோவிட் 19 பெருந்தொற்றின் முக்கிய காலகட்டத்தில் வீரர்கள் ஆற்றிய சேவைகள் பற்றியும் குறிப்பிட்டு பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கினார்.

அப்போது பேசிய அவர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றும், விரைவில், தேசிய செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணைய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டமிட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார். 

பொது பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த ரூ.18,000 கோடியில்  புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், நகர்ப்புறங்களில் பொது போக்குவரத்தை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவும் என்றும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தங்க இறக்குமதி வரி 2.5 சதவிகிதம் குறைப்பு என்றும், வருமான உச்ச வரம்பு மாற்றமின்றி பழைய தொகையான 2 லட்சத்து 50 ஆயிரமாகவே நீடிக்கும் என்றும் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 75 வயதுக்கு மேற்பட்டோர் இனி வருமான வரி தாக்கல்  செய்யத் தேவையில்லை என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து தொகுப்புகளின் மொத்த மதிப்பு ரூ. 27.1 லட்சம் கோடி என்றும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் ஆகும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். 

Tags:    

Similar News