"சென்னையில் ரூ.63,246 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்" நிர்மலா சீதாரமன் அறிவிப்பு !

"சென்னையில் ரூ.63,246 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்" நிர்மலா சீதாரமன் அறிவிப்பு !

Update: 2021-02-01 12:21 GMT

சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும் என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார். 

இந்திய வரலாற்றில் காகிதம் இல்லாத முதல் பட்ஜெட்டை பாஜகவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம். சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும் என்றும், முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

நிறுவனங்கள் சட்டம் 2013, சிறிய நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் திருத்தியமைக்கப்பட உள்ளது என்றும்,  நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் நுகர்வோர் தங்களது உரிமைகளை அறிந்து கொள்ளவும், குறைகளை தீர்க்கவும் புதிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேமலும், தற்போதைய நிலையில் சமூகப்பொருளாதார  மறுஉருவாக்கம் தேவை என்று குறிப்பிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத்தில் பொருளாதார தொழில்நுட்ப முனையம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

உஜ்வாலா திட்டத்தினால் சமையல் எரிவாயு 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 100 நகரங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் ஜம்மு கஷ்மீரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட உள்ளது என்றும் வரும் ஐந்தாண்டுகளுக்கு இந்த திட்டத்திற்காக 1,624 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், கொவிட்-19 காலக்கட்டத்தில்  80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News