கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நிர்மலா சீதாராமன் !!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நிர்மலா சீதாராமன் !!

Update: 2021-03-04 19:01 GMT

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் 1-ந் தேதி தொடங்கி இருக்கிறது.

தடுப்பூசியின் இரண்டாவது கட்டத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மூத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், டாக்டர் ஹர்சவர்தன், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

3-வது நாளான நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரிக்கு தன் மகளுடன் சென்றார். அங்கு அவருக்கு நர்சு ஒருவர் கொரோனா தடுப்பூசியை செலுத்தினார்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனாவிற்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Tags:    

Similar News