"நடப்பு நிதியாண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் நிர்மலா சீதாராமன்" அறிவிப்பு !
"நடப்பு நிதியாண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் நிர்மலா சீதாராமன்" அறிவிப்பு !
இந்திய வரலாற்றில் காகிதம் இல்லாத முதல் பட்ஜெட்டை பாஜகவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், சுகாதாரத்திற்கான செலவினம் 137% அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் காகிதம் இல்லாத முதல் பட்ஜெட்டை ஆர்வமுடன் கவனித்து வருகின்றனர். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வரும் அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா காலகட்டத்தில் 800 மில்லியன் பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டதாக கூறினார்.
மேலும், இரண்டு உலகப் போர்களுக்கு பின்னர் தற்போது உள்ள நிலையும், சமூக பொருளாதார மறு உருவாக்கம் தேவைப்படக்கூடிய அளவில் உள்ளது. உலகிலேயே மிக குறைந்த இறப்பு விகிதமாக ஒரு மில்லியனுக்கு 112 பேர் என்ற அளவில் இந்தியாவில் கொரோனா காலத்தில் உயிரிழப்பு இருந்தது.
நடப்பு நிதியாண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மின்னணு முறையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை காண்பதற்காக இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.