ஆணுறை இல்லை.. அதற்காக இப்படியா? காதலியுடன் உடலுறவின்போது விபரீத விளையாட்டால் இளைஞர் உயிரிழப்பு !!

ஆணுறை இல்லை.. அதற்காக இப்படியா? காதலியுடன் உடலுறவின்போது விபரீத விளையாட்டால் இளைஞர் உயிரிழப்பு !!

Update: 2021-08-24 18:44 GMT

குஜராத்தின் அகமதாபாத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

அகமதாபாத்தின் ஃபதேவாடி பகுதியில் வசிக்கும் இளைஞர் சல்மான் மிர்சா (25), அவரும் அவரது காதலியும் போதைக்கு அடிமையானவர்கள். இருவரும் கடந்த ஜூன் 22 ஆம் தேதி நகரின் ஜுஹாபுரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது இருவரும் உல்லாசகமாக இருக்க முடிவு செய்தனர்.

இதற்காக மிர்சா தனது காதலியுடன் சேர்ந்து போதைப்பொருள் உட்கொண்டார். மேலும் மது அருந்தியுள்ளனர். இதனிடையே உடலுறவுக்கு முன்பு காண்டம் மற்றும் பாதுகாப்பு உபகரணம் இல்லாததை இருவரும் உணர்ந்தனர். கர்ப்பம் தரிக்காமல் இருக்க காண்டம் தேடியும் கிடைக்காததால் அவர்கள் விபரீதமான முடிவு எடுத்தனர். 

அதாவது, மிர்சா தனது ஆணுறுப்பில் வலுவான பிசினை தடவியுள்ளார் என கூறப்படுகிறது. பின்னர் உடலுறவு கொண்டதால் இளைஞர் மயக்கநிலை அடைந்தார். அடுத்த நாள், மிர்சா அம்பர் கோபுரத்திற்கு அருகில் மயக்க நிலையில் காணப்பட்டார். அவரை மீட்ட குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவமனை அழைத்துச்சென்றனர்.

எனினும் அடுத்த சில நாட்களில் இளைஞர் சல்மான் மிர்சா உயிரிழந்தார். இது குறித்த புகாரில் விபத்து மரணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிசின் பயன்பாடு இளைஞரின் உடல்நலத்தை சிக்கலாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  

எனினும் இறந்தவரின் உடல் உறுப்பு தடவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் கிடைத்ததும் உறுதியான காரணம் தெரியவரும்  எனவும் போலிசார் கூறுகின்றனர். எனினும் உல்லாசத்திற்கு சென்ற இளைஞர் விபரீத செயலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


 

Tags:    

Similar News