தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கா?

தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கா?

Update: 2021-12-24 19:30 GMT

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா மற்றும் புதிய ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு..ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரீசலிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒப்பந்த பணியாளர்களின் பணி காலம் வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், நீட்டிப்பு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கால் பயணில்லை என்பதால் பொது இடங்களான வணிக வளாகங்கள், கூட்டம் கூடும் இடங்களில் முககவசம், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை கடுமையாக்கவும், அபராதம் வசூலிக்கவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஓமைக்கிரான் தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், தொற்று 10% அளவில் நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்துவது குறித்த வழிக்காட்டுதல்கள் முறைப்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமைக்ரான் தொற்று வேகமாக இருக்கும் நிலையில், இறப்பு விகிதம் குறைவாக இருப்பினும், தீவிர அவசர கட்டுப்பாட்டு மையங்கள் மீண்டும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் போன்றவை ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Similar News