அரசியல் வேண்டாம்.. ஷங்கர் வேண்டாம்.. மக்களுக்காக தான் இந்த உசுரு.. வடிவேல் நச்சுனு பதில்
அரசியல் வேண்டாம்.. ஷங்கர் வேண்டாம்.. மக்களுக்காக தான் இந்த உசுரு.. வடிவேல் நச்சுனு பதில்
கடந்த பத்தாண்டுகளாக மிகச் சொற்ப படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் வடிவேலு, மீண்டும் முழுவீச்சில் படங்களில் நடிக்கவிருக்கிறார்.
ஷங்கர் தயாரிப்பில் 24ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதில் வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சுராஜ் - வடிவேலு இணையும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (செப்.10) நடைபெற்றது. இதில் வடிவேலு பேசி முடித்தவுடன், பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய நடிகர் வடிவேலு, முதலில் மீம் கிரியேட்டர்களாகிய என் அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. எனக்கு ஏற்பட்ட துன்பங்களை வேறு யாரும் அனுபவிக்கமுடியாது. என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி அடித்தது. கொரோனா வந்தபிறகு என் பிரச்னை சாதாரணமாக மாறிவிட்டது. கொரோனா காலகட்டத்தில் எனது காமெடியை பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.
அரசியலுக்கு பதிலாக திரையில் நடிப்போம். மக்கள் இப்போது நீங்க நடிங்க வடிவேலு என்று சொல்லிவிட்டார்கள். அதனால் அது வேண்டாம். எதிர்காலம் என்றைக்கு வருகிறது என்று பார்ப்போம்.
முதலமைச்சரை அண்மையில் நேரில் சந்தித்தப்போது, அவர் என்னைப் பார்த்தவுடன் சீக்கிரம் படம் நடிங்க வடிவேலு என்று சொன்னார். கண்டிப்பாக உங்க ஆசீர்வாதம் இருக்கும் வரை எனக்கு ஒரு குறையும் இல்லண்ணே என்றேன். அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசினேன். குடும்பத்தைப் பற்றி எல்லாம் விசாரித்து அனுப்பினார்.
முதலமைச்சரை சந்தித்துவிட்டு வந்தபின் எனக்கு எல்லாம் நல்லதாகவே நடைபெறுகிறது. இன்றிலிருந்து என்னுடைய பயணம் நகைச்சுவைப் பயணமாக இருக்கும். மக்களை சந்தோஷப்படுத்திவிட்டுத்தான் இந்த உயிர் போகவேண்டும். இதுதான் என்னுடைய லட்சியம்.
நண்பன் விவேக்கின் மறைவு நாட்டுக்கும் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு. அந்த இடத்தையும் சேர்த்து நிரப்பவேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. இனிவரும் காலங்களில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலோ தயாரிப்பிலோ நடிக்கமாட்டேன். நிறைய போன் வந்து கொண்டிருக்கிறது. எல்லாமே நல்ல கதைகளாக வந்துள்ளன. லாரன்ஸ் சார், அர்ஜுன் சார், சிவகார்த்திகேயன் ஆகியோர் பேசியிருக்கிறார்கள். 2 படங்கள் மட்டும் கதையின் நாயகனாக நடித்துவிட்டு, அப்புறம் ஃபுல்லா காமெடியன்தான், என்று தெரிவித்துள்ளார்.
newstm.in