தரமற்ற பொங்கல் பொருட்களை மாற்றலாம்.. மாவட்ட வழங்கல் அலுவலர் அறிவிப்பு..!
தரமற்ற பொங்கல் பொருட்களை மாற்றலாம்.. மாவட்ட வழங்கல் அலுவலர் அறிவிப்பு..!
பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதன்படி, மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகுப்பை ஜனவரி 31-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் கடலைப் பருப்பு, உளுந்து, மிளகு உள்ளிட்ட பொருட்கள் தரமில்லாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் கூறுகையில், “மாவட்டத்தில், சில கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் குறைபாடு இருப்பதாக இதுபோன்ற புகார்கள் வந்துள்ளன.
புகார் வந்த இடங்களில் பொருட்களை திரும்பப் பெற்று மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. வெல்லத்தை பொறுத்தவரை 150 பேருக்கு மாற்றி கொடுத்து இருக்கிறோம். தற்போது வழங்கியுள்ள பொருட்களில் குறைபாடு இருந்தால் வந்து மாற்றிக்கொள்ளலாம்” என்றார்.