தனியாக செல்லும் பெண்களே இலக்கு… சிக்கிய வடமாநில கும்பல்!!

தனியாக செல்லும் பெண்களே இலக்கு… சிக்கிய வடமாநில கும்பல்!!

Update: 2022-01-31 07:00 GMT

தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த வடமாநிலக் கொள்ளையர்களை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த சாந்தா என்பவர் ரயில்வே கேட் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே வாழப்படி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களிடம் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கைத்துப்பாக்கி இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீஸார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில் இருவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புஸ்பேத்திரபிங்கி, சதாம்ராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள்தான் ஆசிரியையிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும், துப்பாக்கியைக் காட்டி பலபேரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த துப்பாக்கி மற்றும் 11 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

newstm.in

Similar News