“தந்தை அல்ல, நல்ல நண்பர்…” – ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவரின் மகள் உருக்கம்!!

“தந்தை அல்ல, நல்ல நண்பர்…” – ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவரின் மகள் உருக்கம்!!

Update: 2021-12-11 10:21 GMT

தனது தந்தை ஒரு நண்பனைப் போல தன்னிடம் பழகியதாக நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரிகேடியர் லிட்டெரின் மகள் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில்  முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 13 பேரின் உடல்களும் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

டெல்லியில் உள்ள கன்டோன்மென்ட் மயானத்தில் 17 பீரங்கி குண்டுகள் முழங்கத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அரவது மனைவி மதுலிகா ராவத் ஆகியோர் உடல்கள் தகனம் செய்யப்பட்டது.

அதேபோல், பிபின் ராவத்தின் பாதுகாப்பு ஆலோசரகாக இருந்த பிரிகேட்டியர் லிட்டரின் உடலும் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலைப் பார்த்து மனைவி கீதா, மகள் ஆஷனா ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரிகேடியரின் மகள் ஆஷனா, தனது தந்தை நல்ல நண்பராக இருந்தார், ஒரு ஹீரோவாக அவர் இருந்தார், அவர் தங்களிடம் விட்டுச் சென்ற மகிழ்ச்சியான நினைவுகளுடன் வாழ்வோம் என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

newstm.in

Similar News