வரிக் கொள்கை அல்ல... வரிக் கொள்ளையே காரணம்..! - ப.சிதம்பரம் சீற்றம்

வரிக் கொள்கை அல்ல... வரிக் கொள்ளையே காரணம்..! - ப.சிதம்பரம் சீற்றம்

Update: 2021-06-26 20:05 GMT

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணெய் விலை 105 டாலரைத் தாண்டியது. ஆனாலும், பெட்ரோல் விலை 65 ரூபாயைத் தாண்டவில்லை.

இன்றைய நிலைக்கு காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல; வரிக் கொள்ளை. உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையை பெட்ரோல் விலை நீக்கிவிட்டது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.




கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும்போது ஏன் இந்த நிலை..? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணெய் விலை 105 டாலரைத் தாண்டியது; ஆனாலும் பெட்ரோல் விலை 65 ரூபாயைத் தாண்டவில்லை.

மத்திய அரசின் வரிக் கொள்கையல்ல, வரிக் கொள்ளைதான் விலை உயர்வுக்கு ஒரே காரணம். இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News