இனி டிவியில் நக்கிச் சுவைக்கலாம்: சுவையான திரை கண்டுபிடிப்பு !

இனி டிவியில் நக்கிச் சுவைக்கலாம்: சுவையான திரை கண்டுபிடிப்பு !

Update: 2021-12-24 09:30 GMT

திரையில் தோன்றும் உணவை நாக்கால் நக்கினால் அந்த உணவின் சுவையை உணர்த்தும் புதிய வகை தொலைக்காட்சி திரையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தொலைக்காட்சியில் உணவைப் பார்த்து எச்சில் ஊறி ஏங்கும் நாட்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வரக்கூடும். ஜப்பானிய பேராசிரியர் ஒருவர், நக்கினால், அதில் தெரியும் உணவின் சுவையைத் தரும் தொலைக்காட்சித் திரையை உருவாக்கியுள்ளார். 'டேஸ்ட் தி டிவி' எனும் அச்சாதனத்தை மெய்ஜி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹோமெய் மியாஷிட்டா உருவாக்கியுள்ளார். 

டேஸ்ட்-தி-டிவி என்றழைக்கப்படும் இந்த தொலைக்காட்சியின் திரை மீது ஹைஜீன் ஃபிளிம் (சுகாதாரமான பிலிம்) என்றழைக்கப்படும் ஒரு வித பிளாஸ்டிக் படச்சுருள் விரிக்கப்பட்டு, அதன் மீது 10 ரக சுவை நிறைந்த ஸ்பிரே தெளிக்கப்படும்.  திரையில் தோன்றும் உணவுக்கு ஏற்ப அவற்றைப் பல கலவைகளில் கலந்தால், அந்தக் குறிப்பிட்ட உணவில் உள்ள சுவைகள் கிடைக்கும். 

பார்வையாளர் திரையை நக்கி பார்ப்பதற்கு ஒரு முறை பயன்படுத்தி வீசக்கூடிய பிளாஸ்டிக் தாள் உள்ளது. வீட்டில் இருந்தபடியே உலகின் மறுமுனையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவது போன்ற அனுபவத்தைச் சாத்தியப்படுத்துவது தான் இந்த தொழில்நுட்பத்தின் இலக்கு. ஆரம்பநிலையில் உள்ள இந்த சாதனத்தை உருவாக்க ஓராண்டு பிடித்ததாக பேராசிரியர் மியாஷிட்டா கூறினார். இந்த தொலைக்காட்சிகளை வணிக ரீதியில் தயாரிக்கத் தொடங்கினால் ஒரு டிவியை தயாரிக்க 875 அமெரிக்க டாலர் ஆகும் என்றும் மதிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு மத்தியில் இப்படி ஒரு தொழில்நுட்பம் தேவைதானா என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
  
  
newstm.in

Tags:    

Similar News